சமூக இடைவெளியை மீறி சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்!

பொதுமுடக்கம் 5 வது முறையாக ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நான்காவது ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் 5 வது முறையாக ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி, ஊரடங்கு என்பதை புறந்தள்ளி மக்கள் மீன் வாங்க வந்திருந்தது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

Most Popular

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை மகன் கொலை விவகாரத்தில்...

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை அதிமுக அரசு நிறைவேற்றும் : அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

மும்மொழிக்கொள்கைக்கு கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் முதல்வர் எட்பாடி மும்மொழிக்கொள்கைக்கு பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து...

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், இது பற்றி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில்...

’மகனுக்கே அபாரதம் விதித்த கிறிஸ் பிராட்’ இங்கிலாந்து கிரிக்கெட்டின் விநோதம்!

பாகிஸ்தான் – இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரில் மொத்தம் 3 போட்டிகள். அவற்றில் முடிவடைந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால், இறுதிவரை பாகிஸ்தான்...
Do NOT follow this link or you will be banned from the site!