கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி: மாணவர்கள் விடுதிகளை காலிசெய்ய உத்தரவு!

கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி: மாணவர்கள் விடுதிகளை காலிசெய்ய உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையை பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி: மாணவர்கள் விடுதிகளை காலிசெய்ய உத்தரவு!

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது . இதனால் மாணவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஒரு சில தினங்களில் காலி செய்யுமாறு நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏற்கனவே சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையம் கொரோனா வார்டாக மாறியுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா வார்டாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி: மாணவர்கள் விடுதிகளை காலிசெய்ய உத்தரவு!

அந்த வரிசையில் தற்போது சென்னை ஐஐடி மாணவர்கள் விடுதியும் கொரோனா வார்டாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.