ஆன்லைன் வகுப்பு: இடையிடையே வரும் ஆபாச விளம்பரங்களால் மாணவர்கள் பாதிப்பு… உயர்நீதிமன்றம் புதிய யோசனை

ஆன்லைன் வகுப்பு: இடையிடையே வரும் ஆபாச விளம்பரங்களால் மாணவர்கள் பாதிப்பு… உயர்நீதிமன்றம் புதிய யோசனை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பு: இடையிடையே வரும் ஆபாச விளம்பரங்களால் மாணவர்கள் பாதிப்பு… உயர்நீதிமன்றம் புதிய யோசனை

இந்நிலையி இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும், ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும், ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆன்லைன் வகுப்பு: இடையிடையே வரும் ஆபாச விளம்பரங்களால் மாணவர்கள் பாதிப்பு… உயர்நீதிமன்றம் புதிய யோசனை

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசு பள்ளிகளுக்கு தொலைக்காட்சி பாடம் போல தனியார் பள்ளிகளுக்கு சாத்தியமில்லை. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்புகளை, வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம். மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம்” என யோசனைக்கூறி வழக்கை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.