கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக்கூடாது- உயர்நீதிமன்றம்

 

கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக்கூடாது- உயர்நீதிமன்றம்

கொரோனா நிவாரண நிதியாக வழங்கும் நிகழ்ச்சியை, அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது எனவும், ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக் கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக்கூடாது- உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த, தேவராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் மாநில முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி 7 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் அறிவித்து அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பொது வெளியில் கூட கூடாது என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முந்தைய அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கிய போது அரசியல் கட்சியினர் அரசு வழக்கும் நிதியில் தலையீடுவது, நியாய விலை கடைகளில் பதாகை வைப்பது. நிவாரண நிதியை வழங்கும் போது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், ஆளும் கட்சியின் நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளில் எந்தவிதத்திலும் பங்கேற்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு தற்போதும் அப்படியே உள்ளது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தற்பொழுது கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறன்றனர். சென்னை ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளின் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகளையும் கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று நியாய விலை கடைகளில் நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர். அரசு நீதி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாம் இருக்க வேண்டும் நியாய விலை கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக்கூடாது- உயர்நீதிமன்றம்

மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மூன்றாம் தேதி முதல் அரிசி முதலான பொருட்களடங்கிய நிவாரண தொகுப்பு பை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

அவ்வாறு வழங்கும்போது பொதுமக்கள் நியாய விலை கடைகளில் அதிக அளவில் கூடி கொரோனா தொற்று மேலும் தமிழகத்தில் அதிக அளவில் பரவிடும் அபாயம் உள்ளது. ஆகவே உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும், இந்த நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, நிவாரண உதவி வழங்கும் போது, அரசு மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆளுங்கட்சி சின்னத்தை நியாய விலை கடைகளில் பயன்படுத்த கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிவாரணம் வழங்குபவர்கள், இந்நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்ற கூடாது எனவும், அரசியல் சாயம் கொடுக்க கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.