• March
    31
    Tuesday

Main Area

Main



அரிசிக்குப் பதில் பணம் என்ற உத்தரவு செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம்

HighCourt
HighCourt

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசுக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

ரேசன் அரிசி

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயேன்அரிசிக்கு பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்னையில், குடியரசு தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறி, துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதல்வர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

2018 TopTamilNews. All rights reserved.