அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கையை நிறுத்தியது அழகல்ல – ஐகோர்ட்

 

அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கையை நிறுத்தியது அழகல்ல – ஐகோர்ட்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சமீபத்தில் நிறுத்தப்பட்டது. அகில இந்தியத் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த ஒப்புக் கொண்ட அண்ணா பல்கலைக் கழகம், இட ஒதுக்கீடு கொள்கை ஏற்புடையதாக இல்லையென மாணவர் சேர்க்கையை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டது.

அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கையை நிறுத்தியது அழகல்ல – ஐகோர்ட்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையை நிறுத்தியது அழகல்ல என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகமே இட ஒதுக்கீட்டில் முடிவெடுக்க வேண்டியது தானே? படிப்பை வழங்குவதை விட பணத்திற்காக படிப்பை ரத்து செய்ய வேண்டியது கல்வி நிறுவனத்திற்கு ஏற்புடையதா? மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் குழப்பம் ஏன்? என சரமாரியாக கேள்வியை முன்வைத்தனர்.

மேலும், பி.டெக் படிப்புகளை நிறுத்தியது குறித்து தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்.9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.