சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி!

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் ஏ.பி.சாஹி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை நீதிபதி நியமன பணி குறித்த கடந்த சில மாதங்களாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நீதிபதிகளை கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வரும் சஞ்சீப் பானர்ஜி பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி!

கொல்கத்தா, ஒடிசா, டெல்லி உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய சஞ்சீப் பானர்ஜி சிவில், நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு உள்ளிட்டவற்றில் பிரசித்தி பெற்றவர் என்பதால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டின் 50ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.