சென்னை ஹைகோர்ட் நீதிபதியின் மகனுக்கு கொரோனா… அதிர்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள்!

சென்னை ஹைகோர்ட் நீதிபதியின் மகனுக்கு கொரோனா… அதிர்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை அதிவேகமாக மக்களைத் தாக்கிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை ஹைகோர்ட் நீதிபதியின் மகனுக்கு கொரோனா… அதிர்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள்!

இச்சூழலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனின் மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் கொரோனா காரணமாக வழக்குகள் அனைத்தும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன.; கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து வழக்குகள் நேரடியாகவும் விசாரிக்கப்பட்டன. நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் வழக்குகளை நேரடியாக விசாரித்து வந்தார். அவருக்காக ஒதுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளரின் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை ஹைகோர்ட் நீதிபதியின் மகனுக்கு கொரோனா… அதிர்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள்!
c

ஆனால் இதை வெளியில் சொல்லாமல் அந்தப் பணியாளர் தொடர்ந்து பணிக்கு வந்துள்ளார். இதன் காரணமாக நீதிபதி வைத்தியநாதனின் அலுவலகத்தில் உள்ள வாகன ஓட்டுநர், நீதிமன்ற ஊழியர், இரண்டு பொதுப்பணித் துறை ஊழியர்கள், ஒரு காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீதிபதியின் மகனுக்கும் சகோதரிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் நீதிமன்றம் மூடப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.