“கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

“கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம்.

“கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வரும் பல கோடி மக்களின் பல்வேறு கனவுகளில் சென்னைக்கு வர வேண்டும் என்ற கனவும் ஒன்று. வேலை இல்லாமல், பிழைக்க வழியில்லாமல் சென்னையில் தஞ்சம் புகுந்த பலர் இன்று பல்வேறு துறைகளின் அடையாளங்களாக மாறியயுள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! ” என்று பதிவிட்டுள்ளார்.