3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி- சென்னை மாநகராட்சி ஆணையர்

 

3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி- சென்னை மாநகராட்சி ஆணையர்

புதிய கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பாதிப்பு குறையும் என்பதால் இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக 15 மண்டலங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி என ஸ்டிக்கரும், ஒரு தெருவில் 6 பேருக்கு தொற்று இருந்தால் பேனரும் வைக்கப்படும். சென்னையில் மொத்தம் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்கு கூட பக்க விளைவுகள் ஏற்படவில்லை.

3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி- சென்னை மாநகராட்சி ஆணையர்

வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படவுள்ளது. அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1.15 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வீட்டு தனிமையில் இந்த ஆண்டு அதிகமானோர் உள்ளனர்” என தெரிவித்தார்.