தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னையில் குறைந்த கொரோனா பாதிப்பு!

 

தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னையில் குறைந்த கொரோனா பாதிப்பு!

சென்னையில் ஒரே நாளில் புதிதாக 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. தினந்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுவருகிறது.

சென்னையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது. மீண்டும் உயர்ந்துவிடாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு இன்றி இதை சாத்தியப்படுத்த முடியாது. முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வதை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னையில் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 989 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,8106 ஆக அதிகரித்துள்ளது, மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்…