சென்னையில் கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு.. ராயபுரம் தொடர்ந்து முதலிடம்!

 

சென்னையில் கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு.. ராயபுரம் தொடர்ந்து முதலிடம்!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 19,000ஐ எட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. அதே போல நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

சென்னையில் கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு.. ராயபுரம் தொடர்ந்து முதலிடம்!

இந்நிலையில், இன்று சென்னையில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 2324 பேரும் , தண்டையார்பேட்டையில் 1322 பேரும் , திரு.வி.க நகரில் 1393 பேரும் , அண்ணா நகரில் 1089 பேரும் , தேனாம்பேட்டையில் 1412 பேரும் , கோடம்பாக்கத்தில் 1646 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 12,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.