அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா…சென்னையில் பாதிப்பு 12,203 ஆக உயர்வு!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 18,000ஐ எட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. அதே போல நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை காக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது. இதனிடையே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 2252 பேரும் , தண்டையார்பேட்டையில் 1326 பேரும் , திரு.வி.க நகரில் 1325 பேரும் , அண்ணா நகரில் 1046 பேரும் , தேனாம்பேட்டையில் 1317 பேரும் , கோடம்பாக்கத்தில் 1559 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 12,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...