சென்னையில் 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா சிகிச்சை; முழு விவரம் வெளியீடு!

 

சென்னையில் 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா சிகிச்சை; முழு விவரம் வெளியீடு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால், அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த மாதம் பாதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதியில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில், 8ல் இருந்து 6 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இந்த கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை இம்மாத இறுதிக்குள் குறைக்க வேண்டும் என்பதே சென்னை மாநகராட்சியின் இலக்காக இருக்கிறது.

சென்னையில் 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா சிகிச்சை; முழு விவரம் வெளியீடு!

இந்த நிலையில் சென்னையில் கொரோனா சிகிச்சை மற்றும் மண்டலவாரி பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,12,059 பேரில் 98,739 பேர் குணமடைந்து விட்டதாகவும் 10,953 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே போல நேற்று ஒரே நாளில் 12,449 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 2,370 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.