சென்னையில் 96,466 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டனர்: சென்னை மாநகராட்சி தகவல்

 

சென்னையில் 96,466 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டனர்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் கொரோனா பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்து.இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் பரிசோதனைகள் அதிகரிப்பு, நடமாடும் முகாம், முழுபொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டது. அதன் விளைவாக தற்போது சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை நாளுக்கு நாள் கொரோனா பாசிட்டிவ் விகிதங்கள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை 6%க்கும் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே இலக்காக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 96,466 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டனர்: சென்னை மாநகராட்சி தகவல்

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் கொரோனா உறுதியான 1,10,121 பேரில் இதுவரை 96,466 பேர் குணமடைந்து விட்டதாகவும் 11,328 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 2,327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 12,387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் 59.04% ஆண்கள் மற்றும் 40.96% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.