கொரோனா பாதித்தவர் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தம்!

 

கொரோனா பாதித்தவர் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தம்!

சென்னையில் கொரோனா பாதித்தவரின் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டு 25 நாட்கள் ஆகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடித்து மூடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வந்தனர். வைரஸால் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. அண்மையில், சென்னை குரோம்பேட்டை அருகே வசித்து வந்த நபர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டும் அவர் வீடு தகரம் அடித்து மூடப்பட்ட சம்பவம் சர்ச்சை கிளப்பியது.

கொரோனா பாதித்தவர் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தம்!

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தவரின் வீடுகளில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டு விட்டதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டு 25 நாட்கள் ஆகிறது என்றும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக 90 நாட்களுக்கு மேல் ஆகிறது என்றும் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மக்கள் மாஸ்க் அணிவதில் தற்போது அலட்சியம் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்