சென்னை – கோவை சதாப்தி விரைவு ரயில் சேவை நிறுத்தம்!

 

சென்னை – கோவை சதாப்தி விரைவு ரயில் சேவை நிறுத்தம்!

சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் நிறுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக நாடே முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. ரயில், பேருந்து என அனைத்து பொதுப்போக்குவரத்து சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை புறநகர் ரயில்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை – கோவை சதாப்தி விரைவு ரயில் சேவை நிறுத்தம்!

ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், அத்தியாவசிய பயணங்களுக்காக தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அதில் சென்னை – கோவை சதாப்தி விரைவு ரயிலும் ஒன்று. இந்த ரயிலை நிறுத்தப்போவதாக தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் 30ம் தேதியுடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. சென்னை – கோவை சதாப்தி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.