சிக்கினான் ஏடிஎம் கொள்ளையர்களின் தலைவன் : ஹரியானாவில் அதிரடி கைது!

 

சிக்கினான் ஏடிஎம் கொள்ளையர்களின் தலைவன் : ஹரியானாவில் அதிரடி கைது!

தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் ஹரியானாவை சேர்ந்தது என போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அங்கு விரைந்தனர்.இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஹரியானாவை சேர்ந்த அமீர், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் என மூவர் கைதாகினர்.இவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சிக்கினான் ஏடிஎம் கொள்ளையர்களின் தலைவன் : ஹரியானாவில் அதிரடி கைது!

இந்த விவகாரத்தில் கொள்ளைக் கும்பலின் தலைவன் சவுகத் அலியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் . இந்த சூழலில் ஹரியானாவை சேர்ந்த சவுகத் அலி அங்கு வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நஜீம் உசேனின் ஜீப்பில் தான் சவுகத்அலி சென்னை வந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த கும்பல் சென்னையில் மட்டும் சுமார் 17 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

சிக்கினான் ஏடிஎம் கொள்ளையர்களின் தலைவன் : ஹரியானாவில் அதிரடி கைது!

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேலாக இந்த கும்பல் கொள்ளையடித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொள்ளை கும்பலின் தலைவன் சவுகத் அலியை சென்னை கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பல உண்மைகள் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.