`பந்து என்று நினைத்து வெடிகுண்டை கடித்துவிட்டேன்!’- வனப்பகுதியில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

`பந்து என்று நினைத்து வெடிகுண்டை கடித்துவிட்டேன்!’- வனப்பகுதியில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

செங்கம் பகுதியில் உள்ள வனத்தில் விளையாட சென்ற சிறுவன் பந்து என்று வெடிகுண்டை கடித்துவிட்டான். இதில் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

`பந்து என்று நினைத்து வெடிகுண்டை கடித்துவிட்டேன்!’- வனப்பகுதியில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்கரியமங்கலத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் தீபக். 7 வயதான தீபக், அங்குள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலத்தில் விளையாடியக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பந்து போல் காணப்பட்ட பொருளை எடுத்து விளையாட்டாக கடித்துள்ளான். அப்போது திடீரென அது வெடித்து சிதறியது. இதில், தீபக்கின் தாடை, வலது கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் தீபக்கை மீட்டு உடனடியாக செங்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

`பந்து என்று நினைத்து வெடிகுண்டை கடித்துவிட்டேன்!’- வனப்பகுதியில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விலங்குகளை வேட்டையாக வைக்கப்பட்ட நாட்டு வெடி குண்டு என்பது தெரியவந்தது. வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் குறித்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்ராஜ் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறையினரிடம் சிறுவன் தீபக் அளித்த வாக்குமூலத்தில், “கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் அருகில் உள்ள வனப்பகுதிக்கு நண்பர்களுடன் விளையாட செல்வேன். அப்போது, அங்கு பந்து போன்று ஒன்று உருண்டையாக கிடந்தது. அதை பந்து என்று நினைத்து கடித்துவிட்டேன். உடனே அது வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டை யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளான்.