சென்னையை அச்சுறுத்தும் வேதிப்பொருள்! ராமதாஸ் எச்சரிக்கை!

 

சென்னையை அச்சுறுத்தும் வேதிப்பொருள்! ராமதாஸ் எச்சரிக்கை!

லெபனான் நாட்டின் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் வெடித்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் நடத்துவிடுமோ என்று சுங்கத்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

கரூர் நிறுவனத்தின் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் நடத்துவிடுமோ என்று சுங்கத்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையை அச்சுறுத்தும் வேதிப்பொருள்! ராமதாஸ் எச்சரிக்கை!

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!’’என்று தெரிவித்துள்ளார்.