உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் : பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!

 

உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்  : பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைக்கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ.ஆக அதிகரித்து நகர்ந்து வருகிறது . புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்  : பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!

இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் நேற்றிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்  : பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளார். மக்கள் யாரும் ஏரி நிலவரம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கத்தில் 10 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடியில் தற்போது நீர்மட்டம் 21 . 22 அடியாக உயர்ந்துள்ளது.