‘பில்லி, சூனியம்’ என்ற பெயரில் லட்சக் கணக்கில் மோசடி; அதிரவைக்கும் சம்பவம்!

 

‘பில்லி, சூனியம்’ என்ற பெயரில் லட்சக் கணக்கில் மோசடி; அதிரவைக்கும் சம்பவம்!

சென்னையில் பில்லி, சூனியம் எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜகுமாரன்(45). இவர் மினிவேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டின் அருகே சாமியார் ஒருவரை பார்த்த ராஜகுமாரன், அனைவருக்கும் உடல்நிலை சரியில்லை எனக்கூறியுள்ளார். அதற்கு அந்த சாமியார், உங்களுக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள் என்றும் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 கோழி எடுத்துக் கொண்டு சென்னை வருமாறு கூறியுள்ளார்.

‘பில்லி, சூனியம்’ என்ற பெயரில் லட்சக் கணக்கில் மோசடி; அதிரவைக்கும் சம்பவம்!

அதனை நம்பிய ராஜகுமாரன், தனது வேனை ரூ.5 லட்சத்துக்கு விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்றுள்ளார். அந்த சாமியாரை ஸ்டேன்லி மருத்துவ மனை அருகே பார்த்த ராஜகுமாரன், பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு பூஜைக்கு பொருட்கள் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற சாமியார் திரும்ப வரவே இல்லையாம். அப்போது, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த ராஜகுமாரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

‘பில்லி, சூனியம்’ என்ற பெயரில் லட்சக் கணக்கில் மோசடி; அதிரவைக்கும் சம்பவம்!

இதனையடுத்து அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் எண்களின் உதவியுடன், மோசடியில் ஈடுபட்ட வந்த ஒரு கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். அமர்நாத் (21), சுரேஷ் (34), மனைவி ஜெயந்தி , பாப்பா(56) பேரும் அந்த சாமியாருக்கு உதவியவர்களாம். பில்லி, சூனியம் எனக்கூறி பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், அந்த சாமியார் புட்லூரை சேர்ந்த யுவராஜ்(42) என்பதும் தெரிய வந்துள்ளது.

ராஜகுமாரனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவான யுவராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால், பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.