மதத்தைப் பரப்பும் அக்கறை, மனித உயிர்கள் மீது இல்லையே… ரத யாத்திரைக்கு சத்யராஜ் மகள் எதிர்ப்பு!

 

மதத்தைப் பரப்பும் அக்கறை, மனித உயிர்கள் மீது இல்லையே… ரத யாத்திரைக்கு சத்யராஜ் மகள் எதிர்ப்பு!

தமிழகத்தில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத யாத்திரை நடத்த தமிழக பா.ஜ.க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு சத்யராஜ் மகள் திவ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க-வில் ரத யாத்திரைகள் நடத்துவது வாடிக்கையாக இருக்கிறது. வருகிற 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ரத

மதத்தைப் பரப்பும் அக்கறை, மனித உயிர்கள் மீது இல்லையே… ரத யாத்திரைக்கு சத்யராஜ் மகள் எதிர்ப்பு!

யாத்திரை செல்ல தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது
கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டியை அவமரியாதை செய்த விவகாரத்தை தொடர்ந்து கிளப்பும் வகையில் வெற்றிவேல் ரதயாத்திரை என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசு புகார் வந்த உடனேயே வழக்குப் பதிவு செய்து கறுப்பர் கூட்ட நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. இருப்பினும் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சென்று தன்னுடைய இமேஜை உருவாக்க முருகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதத்தைப் பரப்பும் அக்கறை, மனித உயிர்கள் மீது இல்லையே… ரத யாத்திரைக்கு சத்யராஜ் மகள் எதிர்ப்பு!


நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா குறையவில்லை. நாடு முழுக்க தினமும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 5500 என்ற அளவில் தினமும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்வு உள்ளதால் வருகிற அக்டோபர் மாதத்தில் பரவல் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரத யாத்திரை தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இந்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளதாக வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனாத் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. ரதயாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும், உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்கள் உயிர் மீதும், உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
திவ்யா நேரடியாக பா.ஜ.க என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் ரத யாத்திரை என்றாலே அது பா.ஜ.க தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமிழக பா.ஜ.க-தான் ரத யாத்திரைக்குத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. திவ்யாவுக்கு வழக்கம் போல பா.ஜ.க ஐ.டி-விங்கைச் சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.