’’திருச்சி காந்தி சந்தையை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது’’- கே.என்.நேரு!

’’திருச்சி காந்தி சந்தையை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது’’- கே.என்.நேரு!

எல்லோரும் நம்முடன் திமுக இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாம் கடந்த 6 தினங்களாக நடைபெற்று வரும் நிலையில், திமுக முதன்மைச் செயலாளர்
கே.என். நேரு திருச்சி மாவட்டத்தில் உறையூர், கருமண்டபம்,
பீமநகர்செடல் மாரியம்மன் கோயில் மற்றும் ஜீயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இணைய வழி உறுப்பினர் சேர்ப்பு முகாமை துவக்கி வைத்தார்.

’’திருச்சி காந்தி சந்தையை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது’’- கே.என்.நேரு!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, ’’திருச்சி காந்தி சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சில்லறை வியாபாரிகள் உள்ளனர். எனவே 100 ஆண்டு பழமை வாய்ந்த காந்தி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது சரியாக இருக்காது.
திமுக ஆட்சிக்கு வந்தால் காந்தி சந்தை பழைய இடத்திலேயே செயல்படும்.

காந்தி சந்தையை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது. அதே இடத்திலேயே இயங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரத்தை திருச்சி மாவட்டத்தின் புறநகருக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதால் அது திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது’’என்றார்.

’’திருச்சி காந்தி சந்தையை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது’’- கே.என்.நேரு!

மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் உரசல் விவகாரம் 28 ஆம் தேதி செயற்குழு கூட்டத்தில் தெரியும். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே தீரும்’’
என்றார்.