ஐசிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்: விவரம் உள்ளே!

 

ஐசிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்: விவரம் உள்ளே!

சிஐஎஸ்சிஇ வாரியம், ஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஐசிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்: விவரம் உள்ளே!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜுன் 14-ம்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே 13 அல்லது 15-ம் தேதி ஆகிய தினங்களில் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் தேர்வு நாளை மாற்றியமைக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து , மே 13-ல் நடக்கவிருந்த 12-ம்வகுப்பு இயற்பியல் மற்றும் பயன்பாட்டு இயற்பியல் தேர்வு, ஜுன் 8-ம் தேதிக்கும், ஜுன் 1-ம் தேதி நடக்கவிருந்த கணிதத் தேர்வு மே31-ம் தேதிக்கும், ஜுன் 2-ல் நடைபெற இருந்த புவியியல் தேர்வு ஜுன் 3-ம் தேதிக்கும் மாற்றப்பட்டன. மே 21-ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு ஜுன் 2-ம் தேதிக்கும் மாற்றப்பட்டது.

ஐசிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்: விவரம் உள்ளே!

இந்நிலையில்  சிஐசிஎஸ்இ தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி ஆரதூன் , ” சிபிஎஸ்இ திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையின்படி, “தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” காரணமாக மே 13 மற்றும் மே 15 ஆகிய தேதிகளில் எந்தவொரு தேர்வுகளும் திட்டமிடப்படவில்லை. இந்த சூழலில் ஐசிஎஸ்இ மே 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த 10 ஆம் வகுப்பு பொருளாதாரம் (குரூப் II எலெக்டிவ்) தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறும். மே 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஓவிய தேர்வு 2 (நேச்சர் டிராயிங் / பெயின்டிங் ) மே 22ஆம் தேதியும், ஓவிய தேர்வு 2 மற்றும் தேர்வு 3, மே 29 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.அத்துடன் சிஐஎஸ்சிஇ உத்தரவின் படி 10 ஆம் வகுப்பு மே 5 முதல் ஜூன் 7 வரை நடத்தப்படும் என்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 8 முதல் ஜூன் 16 வரையும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும் தேர்வு இந்தமுறை கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.