ஒரே கல்லில் 2 மாங்காய்.. எகிறும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி நடைப்பயணம்..

ஒரே கல்லில் 2 மாங்காய்.. எகிறும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி நடைப்பயணம்..

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெண்களுடன் வரும் 7ம் தேியன்று நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

பெட்ரோல், டீசல் விலைக்கு போட்டியாக சமையல் கியாஸ் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.835 (சென்னையில்) என்ற அளவில் உள்ளது. சமையல் கியாஸ் விலை உயர்வால் நடுத்தர வர்த்தகத்தின் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஒரே கல்லில் 2 மாங்காய்.. எகிறும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி நடைப்பயணம்..
மம்தா பானர்ஜி

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 7ம் தேதியன்று நடைபயணம் மேற்கொள்கிறார். சிலிகுரியில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் இந்த நடைப்பயணத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

ஒரே கல்லில் 2 மாங்காய்.. எகிறும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி நடைப்பயணம்..
சந்திரிமா பட்டாச்சார்யா

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா இது தொடர்பாக கூறியதாவது: பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் எல்.பி.ஜி. (சமையல் கியாஸ்) உயர்ந்துள்ளதால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கவலையாக இருக்கிறது. இதனால் பேரணி (நடைப்பயணம்) பெண்களுடன் மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நடைப்பயணத்தால் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு உயரும் அதேசமயம் மக்கள் மத்தியில் பா.ஜ.க. எதிராக அதிருப்தி அலை உருவாகும் என்று மம்தா பானர்ஜி கணக்கு போடுவதாக தகவல் அறிந்த வட்டார்கள் தெரிவித்தன.