ரோவரை தொடர்ந்து Sleep Mode-க்கு சென்ற விக்ரம் லேண்டர்!

 
chandrayaan chandrayaan

பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் Sleep Mode-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டது. நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்தது. பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு Sleep mode-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  


 இந்த நிலையில், பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரிய மின்சக்தி முழுவதுமாய் தீர்ந்த பின் பிரக்யான் ரோவர் அருகிலேயே விக்ரம் லேண்டர் உறங்க வைக்கப்படும் எனவும் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் செயல்பட துவங்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.