நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்த அறிவியல் ஆய்வு கருவி

 
chandrayaan 3

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் விக்ரம் லேண்டரில் உள்ள அறிவியல் ஆய்வு கருவி நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்துள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்மான (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.  பள்ளம் போன்ற தடைகள் இருந்தால், தாமாகவே பாதையை மாற்றி பக்குவமாக பயணித்து வருகிறது  ரோவர். நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. இதுதவிர ஆக்சிஜன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தனது தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. 

rover

இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் விக்ரம் லேண்டரில் உள்ள அறிவியல் ஆய்வு கருவி நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்துள்ளது. சூரிய வெப்ப காற்று காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது. ஒரு கன மீட்டருக்கு  தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.