சந்திரயான்-3 வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்தியா கூட்டணி சார்பில் பாராட்டு தீர்மானம்

 
INDIA

நிலவில் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, இந்தியா கூட்டணி சார்பில் பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.  பள்ளம் போன்ற தடைகள் இருந்தால், தாமாகவே பாதையை மாற்றி பக்குவமாக பயணித்து வருகிறது  ரோவர். நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்துள்ளது.  

 india


 
இந்த நிலையில், நிலவில் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, இந்தியா கூட்டணி சார்பில் பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இஸ்ரோவின் அசாதாரணமான சாதனைகள் சமூகத்தில் விஞ்ஞான மனநிலையை வலுப்படுத்தும் என நம்புவதாக இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் திறமையயை ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் 60 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும், சந்திரயான் 3 வெற்றி ஒட்டுமொத்த உலகையே செழிப்படைய வைத்திருப்பதாகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.