ஊரடங்கில் தளர்வுகள் : டாஸ்மாக் கடைகள் திறப்பு?

 

ஊரடங்கில் தளர்வுகள் : டாஸ்மாக் கடைகள் திறப்பு?

தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினமே டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது. ஒரு மாத காலமாக டாஸ்மாக்குகள் மூடப்பட்டிருப்பதால் குடிமகன்கள் மது பாட்டில்களுக்காக திண்டாடுகிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஊரடங்கில் தளர்வுகள் : டாஸ்மாக் கடைகள் திறப்பு?

இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க காவல்துறை அதிரடியாக களமிறங்கியுள்ளது. இதுவரை ஆயிரக் கணக்கில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை அடுத்த வாரம் முதல் திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. உயரதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அத்திவாசிய கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதைப் போல டாஸ்மாக்குகளும் நேரக்கட்டுப்பாடுடன் இயங்க அரசு அனுமதி வழங்க உள்ளதாம்.

ஊரடங்கில் தளர்வுகள் : டாஸ்மாக் கடைகள் திறப்பு?

டாஸ்மாக் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வந்த பணத்தை வைத்து தற்போதைய நிலைமையை சமாளித்திருக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் டாஸ்மாக்குகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.