வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கத்திரி வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இது போதாதென்று, வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தையும் இழுத்து சென்று விட்டது. இதனால் வெயில் 100 டிகிரியையும் தாண்டி, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருத்தணியில் 110.8 டிகிரியும், 13 இடங்களில் 100 டிகிரி வெயிலும் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இன்னும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.