‘அடுத்த 3 மணி நேரத்தில்’… 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

‘அடுத்த 3 மணி நேரத்தில்’… 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலில் மக்கள் வாடி வதந்திக் கொண்டிருக்கும் சூழலில் இன்று காலை மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பல இடங்களில் மிதமான மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. சென்னையின் ஒரு சில இடங்களிலும் இன்று காலை மழை பெய்ததாக கூறப்பட்டது.

‘அடுத்த 3 மணி நேரத்தில்’… 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இதைத்தொடர்ந்து நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வரும் 14ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், தருமபுரி ஆகிய 15 மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.