வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால், பல மாநிலங்களில் கனமழை பெய்தது. கேரளாவில் பெய்த கனமழையால் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு 61 பேரின் உயிரை பறித்தது. அதே போல ஆந்திராவில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. அதே போல தமிழகத்தில் பெய்த கனமழையால், நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவ்வாறு பல இடங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மதுரை, விருதுநகர், சேலம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்சமாக காரைக்குடி, தேவாலா, தாமரைப்பாக்கம், திருத்தணியில் தலா 3 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.