தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி நிலவிய வானிலை மக்களை குதூகலம் அடையச்செய்தது. அதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை இல்லாமல், குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனத்தால் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், தேனி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.