வலுவிழந்தது ‘புரெவி புயல்’: தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு!

 

வலுவிழந்தது ‘புரெவி புயல்’: தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் கரையைக் கடந்தது. அதைத்தொடர்ந்து, மறு நாளே பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்தது. இருப்பினும், அந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கிட்டத்தட்ட 30 மணி நேரத்திற்கு மேலாக அதே இடத்தில் நீடித்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்தது.

வலுவிழந்தது ‘புரெவி புயல்’: தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு!

குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையிலும் பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

வலுவிழந்தது ‘புரெவி புயல்’: தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு!

இந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் லட்சத்தீவு, மாலத்தீவு, குமரி கடல், அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.