தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

விழுப்புரம் ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கடலூர், புதுக்கோட்டை, தர்மபுரி ,வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.