இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாகக் கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி நிலவிய வானிலை மக்களைக் குதூகலம் அடையச்செய்தது. அதனைத்தொடர்ந்து நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
if a raindrop falls on the ground

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கோவை, சேலம், தருமபுரி,புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு 5 நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.