தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி நிசர்கா என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது, தீவிர புயலாக மாறி மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 215 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 440 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டிருந்தது. வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே இன்று கரையை கடந்தது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில் நிசர்கா புயலின் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.