நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

 

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக திண்டுக்கல், ஈரோடு, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதோடு நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 10 செ.மீ, சோலையாறு பகுதியில் 8 செ.மீ, வால்பாறை பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.