இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. பகலில் கொளுத்தும் வெயில், இரவில் கொட்டும் மழை என வானிலை மாறி மாறி இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், சேலம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நாளை முதல் கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதியிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.