“அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

“அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 30ம் தேதி வரை இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்பை எதிர்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தேனி திண்டுக்கல் சேலம் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீலகிரி மற்றும் கோவையில் 30ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக மத்திய மேற்கு கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மன்னார்வளைகுடா, தென் மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.