இந்த 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

இந்த 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம் , தர்மபுரி ,கிருஷ்ணகிரி, ஈரோடு ,திருப்பூர் , திருப்பத்தூர், மதுரை, கரூர் ,நாமக்கல் ,திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் , விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர் ,அரியலூர், பெரம்பலூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

இந்த 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வருகின்ற 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்று வெப்ப நிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

இந்த 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் . அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.