20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.