அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் பிற மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

மேலும், டிச.30 முதல் ஜனவரி 2 வரையிலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் பெருமழை ஓய்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. இரவு நேரத்தில் பனி கொட்டித் தீர்த்தாலும் பகலில் வெயில் அடிக்கும் வானிலையே நிலவுகிறது. இத்தகைய சூழலில், ஜன.2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.