தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்காசி, குமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வடதமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.