வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில் குமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ,புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடியில் மிதமான மழை பெய்யும் எனவும் வடமாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

முன்னதாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அத்துடன் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி , காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.