காஞ்சிபுரம், விழுப்புரம், நாகபட்டினத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

 

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகபட்டினத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகபட்டினத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகபட்டினத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாகவும் பதிவாகும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகபட்டினத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!
அரபிக் கடலில் கர்நாடக கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்துக்கு காற்று வீசக்கூடும். எனவே, கேரள, கர்நாடக, லட்சத்தீவுகளை ஒட்டியப் பகுதிகளுக்கு ஜூலை 15, 16ம் தேதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளது.