“மீண்டும் புயலுக்கு வாய்ப்பு”: 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

“மீண்டும்  புயலுக்கு வாய்ப்பு”:  48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவாகி, நிவர் புயல் உருவானது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்தது.

“மீண்டும்  புயலுக்கு வாய்ப்பு”:  48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

இந்நிலையில் வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“மீண்டும்  புயலுக்கு வாய்ப்பு”:  48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர்1 முதல் 3ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். வங்க கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் கரையை கடந்த நிவர் புயல் தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.