செரா சானிட்டரிவேர் நிகர லாபம் ரூ.47.91 கோடி.. பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.13 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

செரா சானிட்டரிவேர் நிகர லாபம் ரூ.47.91 கோடி.. பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.13 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

செரா சானிட்டரிவேர் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.47.91 கோடி ஈட்டியுள்ளது.

செராமிக் சிங்க்குகள், வாஷ்பேசின்கள் உள்பட பல்வேறு வகை பாத்ரூம் மற்றும் டாய்லெட் செராமிக் பிட்டிங்குகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வரும் செரா சானிட்டரிவேர் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. செரா சானிட்டரிவேர் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.47.91 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 33.6 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.35.85 கோடி ஈட்டியிருந்தது.

செரா சானிட்டரிவேர் நிகர லாபம் ரூ.47.91 கோடி.. பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.13 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
செரா சானிட்டரிவேர்

2021 மார்ச் காலாண்டில் செரா சானிட்டரிவேர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.438.42 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 47.2 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் செரா சானிட்டரிவேர் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.297.84 கோடி ஈட்டியிருந்தது.

செரா சானிட்டரிவேர் நிகர லாபம் ரூ.47.91 கோடி.. பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.13 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
செரா சானிட்டரிவேர்

செரா சானிட்டரிவேர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.13 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு செரா சானிட்டரிவேர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.38 சதவீதம் குறைந்து ரூ.4,365.65ஆக சரிந்தது.