12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த உயர்மட்ட கூட்டம்!

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த உயர்மட்ட கூட்டம்!

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட கூட்டம் காணொளிக்காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த உயர்மட்ட கூட்டம்!

இந்த கூட்டத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதில் பங்கேற்க அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்வுகளுடன் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுவதன் மூலமாக மாநில வாரிய தேர்வுகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், மாணவர்களின் நலன் கருதியும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் பேசி முடிவெடுக்கவே இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.